››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

உயிர்காப்பு நடவடிக்கைகளில் புதிய மைல் கல்லை எட்டிய கடலோர பாதுகாப்பு படை

உயிர்காப்பு நடவடிக்கைகளில் புதிய மைல் கல்லை எட்டிய கடலோர பாதுகாப்பு படை

[2017/01/24]

அண்மையில் (ஜனவரி.19) கடலில் மூழ்கி தத்தளித்த ஒருவரை தெற்கு கரையோர நகரமான பலபிட்டிய கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இம் மீட்பு நடவடிக்கையின் மூலம் உயிர்காப்புப் நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் சுமார் 800 உயிர்களை பாதுகாத்தது எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

நாடுமுழுவதும் முக்கிய கடற்கரையோரங்களில் அமைந்துள்ள உயிர்காப்பு பிரிவுகளின் மூலம் கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பாளர்கள், கடலில் மூழ்கிய சுமார் 482 உள்ளூர் மற்றும் 318 வெளிநாட்டு பிரஜைகளை பாதுகாத்துள்ளதுடன் தற்போது கடலோர பாதுகாப்பு படையின் 196 நிபுணத்துவம் வாந்த உயிர்காப்பாளர்கள் மேற்படி உயிர்காப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கை கடலோர பாதுகாப்பு படை நாடுமுழுவதும் 13 உயிர்காப்பு நிலையங்களை நிறுவி பராமரித்து வருகின்றது.
பலபிட்டியவில் அமைந்துள்ள உயிர்காப்பு பயிற்சிப் பாடசாலையின் மூலம் நிபுணத்துவம் வாந்த உயிர்காப்பாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்புப் பிரிவு 2009ஆம் ஆண்டு தமது நடவடிக்கைகளைஆரம்பித்தது. இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் மிரிஸ்ஸ கடற்பரப்பில் மூழ்கிய கொரிய நாட்டுப் பிரஜையான திரு. ஜோஹோங் சியொக் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டார். இவரே இப்பிரிவினரால் காப்பாற்றப் பட்ட முதலாவது வெளிநாட்டுப் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்