››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

 பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் தலையீட்டையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

 பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் தலையீட்டையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

[2017/01/27]

வவுனியாவில், காணாமல் போனோர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நேற்று (ஜனவரி.26) வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குறித்த இப் பேச்சுவார்த்தையின் போது தமது உறவுகளை இழந்த உண்ணாவிர போராட்டக்காரர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இராஜாங்க அமைச்சர் அமைதியாக கேட்டு அறிந்துகொண்டார். மேலும் அவர், இரு வாரங்களுக்குள் அலரிமாளிகையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி தருவதாக தெரிவித்ததையடுத்து உண்ணாவிர போராட்டக்காரர்கள் தமது உண்ணாவிரதத்தை கைவிடுவதற்கு தீர்மானித்தனர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் விஜேவர்த்தன அவர்கள் உண்ணாவிர போராட்டக்காரர்களுக்கு நீராகாரம் வழங்கி அடையாள பூர்வமாக உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

மேலும், இங்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர், போரின்போது போது அனைத்து சமூகங்களும் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதால் நாம் இப் பிரச்சினையை உணர்வுபூர்வமாகவும் மனிதாபிமான முறையிலும் பார்க்க வேண்டும் எனவும் உண்ணாவிர போராட்டக்காரர்களுக்கும் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் திணைகள அதிகாரிகளுக்கும் இடையே இரு வாரங்களுக்குள் அமைச்சர்களான கௌரவ. சாகல ரத்நாயக்க, கௌரவ. விஜயதாச ராஜபக்ச அவர்களின் பங்கேற்புடன் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இச்சந்திப்பின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான பொலிஸாரின் விசாரணை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்