››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நாகதீப விகாரையில் புத்தர் சிலை செயலாளரினால் திரைநீக்கம்

நாகதீப விகாரையில் புத்தர் சிலை செயலாளரினால் திரைநீக்கம்

[2017/01/27]

நாகதீப புராண ரஜமகா விகாரையில் கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றினை பாதுக்கப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் அண்மையில் (ஜனவரி .26) திரைநீக்கம் செய்துவைத்தார்.

குறித்த புத்தர் சிலையானது, நாகதீப புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் வடமாகாணத்தின் பிரதம மகா சங்க நாயக்க தேரருமான வணக்கத்துக்குரிய பிரவீனச்சரிய தர்ம கீர்த்தி சிறி நவடகள படுமகித்தி திஸ்ஸ தேரர் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் செதுக்கப்பட்டதாகும்
இப்புத்தர் சிலையினை “முச்சலிண்ட நாக ராஜா” விற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கமாண்டர் டி எம் எஸ் ஜெயவர்தன அவர்களால் செதுக்கப்பட்டதாகும்.

இந்நிகழ்வில் மகா சங்க நாயக்க தேரர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

     

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்