››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விழிப்புலனற்றோர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை இராணுவ வீரர்கள் தெரிவு

விழிப்புலனற்றோர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை இராணுவ வீரர்கள் தெரிவு

[2017/01/29]

இந்தியாவில் நடைபெறும் விழிப்புலனற்றோர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணியை பிரதிநிதிப்படுத்தி இலங்கை இராணுவத்தின் விழிப்புலனற்ற நான்கு கிரிக்கெட் வீரர்கள் விழிப்புலனற்றோர்களுக்கான தேசிய கிரிக்கெட் சபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவலகள் தெரிவிக்கின்றன. தேசிய அணிக்காக நாடுமுழுவதிலுமிருந்து திறமையான 17 விளையாட்டு வீரர்கள் குழாம் இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெறும் இரண்டாவது விழிப்புலனற்றோர்களுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள அண்மையில் (ஜனவரி. 28) நாட்டிலிருந்து பயணமானார்கள்.

இவ்வுலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியுசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்குகொள்கின்றன. இலங்கை அணி தனது தொடக்க ஆட்டத்தில் நியுசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இவ்வருட இவ்வுலகின்ன போட்டி இந்திய விழிப்புலனற்றோர்களுக்கான தேசிய கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை இராணுவத்திலிருந்து கோப்ரல் ஜே.பி.டி. ரவீந்திர, கோப்ரல் ஐ.ஏ.ஜி. சமன் குமார, கோப்ரல் ஐ.டி.கே. சகன் குமார மற்றும் கோப்ரல் டப்.ஜி.எல்.எஸ். பண்டார ஆகியோரே விழிப்புலனற்றோர்களுக்கான இலங்கை கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்