››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுத்தினரால் யாழ் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

இராணுத்தினரால் யாழ் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

[2017/01/29]

அண்மையில் யாழ் குடா நாட்டில் இலங்கை இராணுவத்தினரால் டெங்கு ஒழிப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த இந்நிகழ்வு யாழ் குடா நாட்டிலுள்ள 143 கிராமப்புற பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் ஜனவரி 14ம் திகதி முதல் 22ம் திகதிவரை இடம்பெற்றது. யாழ் பாதுகாப்புபடை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில் 51, 52 மற்றும் 55 வது படைப்பிரிவின் அதிகாரிகள் உட்பட 1000 க்கும் அதிகமான இராணுவ வீர்கள் கலந்துகொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த இந்நிகழ்வானது, இப்பிரதேசங்களில் கொடிய டெங்கு நோய் பரவுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் அரச மற்றும் சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் இராணுவத்தினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்ளப்பட்டது. தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நல்லூர், தென்மராட்சி, வடமாராட்சி கிழக்கு, வடமாராட்சி வடக்கு, வடமாராட்சி தென் மேற்கு, வெலிகாமம் கிழக்கு, வெலிகாமம் தெற்கு, மற்றும் வெலிகாமம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலை களின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், ஆகியோரின் உதவியுடன் இராணுவத்தினர் மேட்கொண்டனர். இதேவேளை, ஜனவரி மாதம் 7ம் 8ம் திகதிகளில் 67 பாடசாலைகளை உள்ளடக்கிய இவ்வாறான நிகழ்வொன்று யாழ் பாதுகாப்பு படைதலைமையக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்