››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை இராணுவ கல்லூரியின் மொழியியல் கற்கைப் பிரிவினால் பிரெஞ்சு மொழி கற்கைகள்

இலங்கை இராணுவ கல்லூரியின் மொழியியல் கற்கைப் பிரிவினால் பிரெஞ்சு மொழி கற்கைகள்

[2017/01/28]

இலங்கை இராணுவ கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை விரிவு படுத்தும் நோக்கில் “ஸ்மார்ட் கிளாஸ்” எனும் மொழியியல் கற்கைப் பிரிவு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இப்பாட நெறி மூலம் பிரெஞ்சு மொழியானது, கடட் பயிற்சி பெரும் அதிகாரிகள் மற்றும் ஐ. நா. வின் அமைதிகாக்கும் பணிகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட படையினர் ஆகியோருக்கு கற்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஐ. நா. வின் அமைதிகாக்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ள படையினர் நன்மையடையவுள்ளனர். மேலும் எதிகாலத்தில் மாலி மற்றும் ஆபிரிக்க கண்டத்தில் பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளில் இவர்கள் ஐ. நா. வின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அறுபது மணித்தியாலங்கள் கொண்ட “ஸ்மார்ட் கிளாஸ்” பாடநெறி , பிரஞ்சு மொழியில் உரையாடல், கேட்டல், பேசுதல், வாசித்தல், மற்றும் எழுதுதல் ஆகிய பயிசிகளுடன் இறுதி மற்றும் அதற்கு முந்தைய கல்வியாண்டு கடட் அதிகாரிகளுக்கு கல்வி வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை, ஐ.நா. பணிக்காக உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவப்படையினர் பிரஞ்சு மொழி அரச கரும மொழியாக பயன்படுத்தப்படும் இடங்களில் தமது செயட்பாடுகளை மிகவும் பயனுள்ளதாகவும் மற்றும் திறமையான முறையிலும் மேற்கொள்ள “ஸ்மார்ட் கிளாஸ்” மொழி கூடம் உறுதுணையாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வானது இராணுவத்தளபதியின் வழிகாட்டலின் கீழ் இராணுவ பயிற்சி பணிப்பாளர், பிரிகேடியர் விஜித ரவிபிரிய அவர்களின் தலைமையில் இலங்கை இராணுவ கல்லூரியின் கொமடான் மற்றும் பயிற்றுனர்கள் ஆகியோரினால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்