››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சினால் டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுப்பு

பாதுகாப்பு அமைச்சினால் டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுப்பு

[2017/02/01]

கொழும்பு பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளில் விஷேட டெங்கு ஒழிப்புத்திட்டம் ஒன்றினை இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அமைச்சு இன்று ( ஜனவரி .01) மேற்கொண்டுள்ளனர். கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டெங்கு நோய் பரவுவதை தடை செய்யும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையினால் இக் கொடிய டெங்கு நோய் அதிகமாக பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதேவேளை, குறித்த நோய் பரவுவதற்கு நீர் தேங்கி நிற்கும் இடங்கள் மற்றும் சுத்தம் செய்யாத சூழல் ஆகியன மேலும் நுளம்புகள் பெருக உறுதுணையாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த நோய் பரவுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் கொலன்னாவா, பத்தரமுல்ல, கடுவெல, பிட்டகோட்டை, கங்வெள்ள, கோமாகம, கஹடுடுவ, மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 47 பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் பல்வேறு படைபிரிவை சேர்ந்த இராணுவத்தினர் ஒன்றினைந்து இத்திட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், நோய் பரவும் இடங்களை கண்டறிந்து அவற்றினை சுத்தம் செய்து அவை மேலும் பரவாது பாதுகாக்க உதவுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்