››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சுதந்திர தின ஏற்பாடுகளை பாதுகாப்பு செயாலாளர் கண்காணிப்பு

சுதந்திர தின ஏற்பாடுகளை பாதுகாப்பு செயாலாளர் கண்காணிப்பு

[2017/02/02]

காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 69வது சுதந்திர தின ஏற்பாடுகள் மற்றும் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை என்பனவற்றை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் நேற்று (பெப்ரவரி.01) பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, இராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள் , சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் 69வது சுதந்திர தினம் எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளது. இதில் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பவற்றைச் சேர்ந்த சுமார் 8000 வீரர்கள் அணிவகுப்பு மரியாதையில் பங்குபற்றவுள்ளனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்