››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2017/02/03]

‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முட – 367’ எனும் இந்தோனேசிய கடற்படைக்கப்பல் நேற்று (பெப்ரவரி, 02 ) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது. வருகை தந்த குறித்த இக்கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். குறித்த கப்பல் எரிபொருள் மீள்நிரப்புதல் மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இவ்விஜயத்தினை மேற்கொண்டுள்ளது.

மேலும், இக்கப்பலின் கட்டளைத்தளபதி கொமாண்டர் ரியோ ஹென்றிமுகோ யும் அவர்கள் மேற்கு கடற்படை கட்டளைகத்தின் மேற்கு பிராந்திய கட்டளைத் தளபதியை சந்தித்து கலந்துரையாடினார். இதேவேளை குறித்த இக்கப்பல் எதிர்வரும் ஐந்தாம் திகதி நாட்டை விட்டு புறப்படவுல்லமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்