››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கடற்படை கப்பல் சமுதுரா பாகிஸ்தான் “அம்னா” கடற்படை பயிற்சியில்

இலங்கை கடற்படை கப்பல் சமுதுரா பாகிஸ்தான் “அமான்” கடற்படை பயிற்சியில்

[2017/02/05]

பாகிஸ்தான் “அமான்” கடற்படை பயிற்சியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் நோக்கி அண்மையில் (பெப்ரவரி .03) இலங்கை கடற்படையின் கடல் ரோந்துக் கப்பல் சமுதுரா புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கராச்சியில் இம்மாதம் 10ம் திகதியிலிருந்து 14ம் திகதிவரை இடம்பெற இருக்கும் குறித்த பயிற்சியில் கலந்துகொள்ளும் நோக்கில் இலங்கை கடற்படையின் 186 சிப்பாய்கள் மற்றும் 8 மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினரும் சென்றுள்ளனர். குறித்த இப்பயிற்சியில் 21 நாடுகளின் பங்கேற்றலுடன் பல்வேறு கடற்படை பயிற்சிகள் மற்றும் செயற்பாடுகள் இடம்பெற இருக்கின்றன.

குறித்த கப்பல் இம்மாதம் 09ம் திகதி கராச்சி துறைமுகத்தை வந்தடையும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்