››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜனாதிபதியினால் “சுவத உயன“ பூங்கா திறந்துவைப்பு.

ஜனாதிபதியினால் “சுவத உயன“ பூங்கா திறந்துவைப்பு.

[2017/02/07]

 

அண்மையில் (பெப்ரவரி .06) எல்தேனிய மஹர பிரதேசத்தில் “சுவத உயன“ பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது. குறித்த இந்நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் சமுகமளித்திருந்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “சுவத உயன“ சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி மையம், மற்றும் நடைபாதை ஆகிய பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்டுள்ளதோடு 10 ஏக்கர் நிலப்பரப்பில் 306 மில்லியன் ரூபா பெறுமதி கொண்ட இப் பூங்கா 1.8 கிலோமீட்டர் நடைபாதையுடன் அமையப்பெற்றுள்ளது. மேலும், இங்குள்ள உடற்பயிற்சி மையமானது நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் காணப்படுகின்றது.

மெகாபொலிஸ் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சினால் செயல்படுத்தப்படும் குறித்த திட்டத்தினை நாட்டின் எதிர்காலஅபிவிருத்திக்காக ஒரு ஆரோக்கிய தேசத்தை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், மற்றும் பெறும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்