››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் காரை தீவுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம்

கடற்படையினரால் காரை தீவுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம்

[2017/02/12]

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக வடபிராந்திய கடற்படை தலைமையகத்தினால் நடமாடும் மருத்துவ முகாமொன்று காரை தீவுப்பகுதியில் அண்மையில் (பெப்ரவரி,10) முன்னெடுக்கப்பட்டது. குறித்த இம்மருத்துவ முகாம், யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் மையங்களுடன் இணைந்து பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை மருத்துவம், மகப்பேறியல் / பெண்ணோயியல், பொது அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை, கண் மருத்துவம், பொது மருத்துவம், நரம்பியல் மற்றும் அகஞ்சுரப்பு தொகுதி ஆகிய மருத்துவ துறைகளைச் சேர்ந்த விஷேட வைத்திய நிபுணர்கள் குழு பங்கு கொண்ட இம்மருத்துவ முகாமில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 565ற்கு மேற்பட்ட நோயாளர்கள் கலந்துகொண்டு தமது பிரச்சினைக்கான தீர்வினைப் இலவசமாக பெற்றுக்கொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்