››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அங்கவீனமுற்று ஓய்வு பெற்ற யுத்த வீரர்களுக்கு ஓய்வூதியம்

அங்கவீனமுற்று ஓய்வு பெற்ற யுத்த வீரர்களுக்கு ஓய்வூதியம்

[2017/02/14]

அங்கவீனமுற்று உரிய காலத்திற்கு முன்னரே ஓய்வு பெற்ற யுத்த வீரர்களுக்கான சேவை ஓய்வூதிய கொடுப்பணவுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (பெப்ரவரி .14) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களும் கலந்துகொண்டார்.

பயங்கரவாத நடவடிக்கைகளின்போது அங்கவீனமுற்று ஓய்வுபெற்ற 10 வருட சேவையிலும் குறைந்த அதிகாரிகள், 12 வருட சேவையிலும் குறைந்த முப்படையை சேர்ந்த இராணுவத்தினர், மற்றும் 10 வருட சேவையிலும் குறைந்த காவல்துறையினர் ஆகியோர் குறித்த சேவை ஓய்வூதிய வசதிகளை பெற்றுக்கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

குறித்த இந்நிகழ்வின்போது, 100 இராணுவத்தினர், 22 கடற்படையினர் , 25 விமானப்படையினர், மற்றும் 3 காவல்துறையினர் அடங்கலாக மொத்தம் 150 அங்கவீனமுற்று ஓய்வுபெற்றோர் உத்தியோகபூர்வமாக ஓய்வூதியத்திற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். மேலும், இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட சமூகசேவை வசதிகள், இராணுவ சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகள் ஆக்கியவற்றினையும் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிகழ்வில், நிதி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் திரு. கிங்ஸ்லி பெர்னாண்டோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏ பீ ஜீ கித்சிறி, பாதுகாப்பு உயர் அதிகாரிகள், இராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி, அமைச்சின் உயர் அதிகாரிகள், முப்படையினர், மற்றும் காவல்துறையினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்