››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான சந்திப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான சந்திப்பு

[2017/02/15]

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு இலங்கை முன்னாள் இராணுவ சேவையாளர்களின் சங்க தூதுக்குழுவினர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களுடன் இன்று (பெப்ரவரி. 15) சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சசின் செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிறி அவர்களும் கலந்து கொண்டார்.

மேலும், இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான வேலைத்திட்டம் மற்றும் அவர்கள் தொடர்பான இதர நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இதன்போது சிறப்பாக நடைமுறைப் படுத்துவற்கான ஆலோசனைகளை இராஜாங்க அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில், இலங்கை ஒய்வுபெற்ற இராணுவ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் (ஓய்வுபெற்ற) கே ஏ ஞானவீர, இராணுவ சங்க உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் திணைக்கள உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்