››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கடற்படை கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் சுமார் 20 மில்லியன் டொலர் வருமானம் ஈட்பு.

இலங்கை கடற்படை கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் சுமார் 20 மில்லியன் டொலர் வருமானம் ஈட்பு.

[2017/02/17]

கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் இலங்கை கடற்படையினர் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சேவையின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் தற்போதுள்ள நாணய மாற்று விகிதத்தின் பிரகாரம் சுமார் 3 பில்லியன் இலங்கை ரூபா பெறுமாதியாகும். இவ்வாறு ஈட்டப்படும் வருமாம் அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்தில் நேரடியாக வைப்பிலிடப்படுகின்றது

2015ம் ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் இருந்து சுமார் 8,200 கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கப்பல் சேவைகள் செயற்பாட்டு அலுவலகங்களினூடாக பயணங்களை மேற்கொண்டுள்ளன. இதன்பிரகாரம் மாதாந்தம் 550 கப்பல்கள் எனும் விகிதாசாரத்தில் கடல்சார் பாதுகாப்பு சேவைகள் இடம்பெற்றதன் மூலம் இலங்கை கடற்படை சுமார் 200 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
குறித்த சேவைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் விஷேட வழிகாட்டல்களுக்கு இணங்க செயட்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு மற்றும் காலியில் அமைந்துள்ள செயற்பாட்டு அலுவலகங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் இதனுடன் தொடர்புடையவைகளை விநியோகித்தல், வைத்துக்கொள்ளல் மற்றும் மீள பெற்றுக்கொள்ளல் எனும் நடவடிக்கைகளை பாதுகாப்பு நிபுணர் குழுவினர்கள் மூலம் கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்