››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை இராணுவம் மறுப்ப

தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை இராணுவம் மறுப்பு

[2017/02/18]

போருக்கு பிந்தைய சூழலில் இலங்கை இராணுவம், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியதாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத் தலைவாரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களைக் கொண்ட அறிக்கைய இலங்கை இராணுவ தலைமையகம் முற்றாக மறுக்கிறது.

2010ம் ஆண்டில் வடக்கில் சிவில் நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்ட பின் சிவில் நிருவாகம் தொடர்பான அனைத்து வடிவங்களிளுமிருந்தும் இலங்கை இராணுவம் விலகிக்கொண்டது.

அதிலிருந்து இலங்கை இராணுவம் சிவிலியன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதுவித நிர்வாக நடவடிக்கைகலிலும் ஈடுபட்டிருக்கவில்லை எனும்போது பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான கேள்விகள் எழ வாய்ப்பில்லை.

துரதிஷ்டவசமாக, இந்த அறிக்கையின் ஆசிரியர், பாலியல் வன்கொடுமை அல்லது துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவத்தைக் குறிப்பிடாமல் அடிப்படைகளற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான செயற்பாடுகளை எதுவிதத்திலும் அனுமதிக்காத தன்மையினை 1971ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பிரேமாவதி மனம்பேரி சம்பவத்திலும் 1995-2005ம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கிரிஷாந்தி குமாரஸ்வாமி மற்றும் ராஜினி வெல்லயதுன் பிள்ளை ஆகிய சம்பவங்களிலும் கண்டுகொள்ளலாம். இவ்வனைத்து சம்பவங்களிலும் சிவில் வழக்கு நீதி மன்றத்திற்கு இலங்கை இராணுவம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியதன் ஊடாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இக் கொள்கை ஏற்ப, இவ்வாறன நடவடிக்கைகளில் ஈடுபட்டோருக்கு எதிராக இலங்கை இராணுவம் எப்போதும் கடும் நடவடிக்கைகளை எடுப்பதுடன் சிவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்/ நடவடிக்கை நிலுவையில் உள்ளோர்கள் ஆகியோரை இராணுவத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றுகின்றது.

அரசாங்கம், சட்டம் மற்றும் நல்லிணக்கசெயற்பாடுகளை நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற இச்சமயத்தில் ஆதாரமற்ற இக்குற்றச்சாட்டுக்கள் நல்லிணக்க செயற்பாடுகளை பாதிப்படையச் செய்யும். (முடிவு)



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்