››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு “சீஐஎஸ்எம் டே ரன்“ நிகழ்வு

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு “சீஐஎஸ்எம் டே ரன்“ நிகழ்வு

[2017/02/18]

 

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின ஓட்ட நிகழ்வு காலிமுகத்திடலில் இன்று (பெப்ரவரி .18) இடம்பெற்றது. இந்நிகழ்வில் படை தளபதிகள் சகிதம் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படைவீர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த இந்நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, எயார் சீப் மார்ஷல் கோலித்த குணதிலக அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இரண்டு கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட “சீஐஎஸ்எம் டே ரன்“ நிகழ்வு, காலிமுகத்திடலில் இருந்து பாதுகாப்பு சேவைகள் கல்லூரிவரை இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான முப்படை வீரர்களின் பங்குபற்றினர்.

1948ம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதி 134 நாடுகளின் இராணுவப்படை அங்கத்துவத்துடன் “விளையாட்டினூடாக நட்பு” எனும் கொள்கையின் அடிப்படையில் விளையாட்டினூடாக உலக சமாதானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த இந்நிறுவனம் 30 வகையான விளையாட்டுகளிலிருந்து 2௦க்கு மேற்பட்ட இராணுவ உலக சம்பியன் பட்டத்திற்கான விளையாட்டுகளையும் வருடாந்தம் எற்பாடுசெய்கின்றது.

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படை தளபதி, விமானப்படை தளபதி, முப்படையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்