››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கட்டுகுருந்தை படகு விபத்து தொடர்பில் ஜனாதிபதி அனுதாபம்…

கட்டுகுருந்தை படகு விபத்து தொடர்பில் ஜனாதிபதி அனுதாபம்…

[2017/02/20]

களுத்துறை கட்டுகுருந்தை கடல் பகுதியில் படகொன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்பட்டவுடனேயே குறித்த தரப்பினருடன் தொலைபேசி தொடர்புகளை ஏற்படுத்திய ஜனாதிபதி, விபத்துக்குள்ளானவர்களை மீட்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஆலோசனை வழங்கியதுடன், விபத்துக்குள்ளானவர்களுக்குத் தேவையான சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விபத்தில் மரணமடைந்தவர்களது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்