››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரே ஜனாதிபதி நான் தான் – ஜனாதிபதி

சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரே ஜனாதிபதி நான் தான் – ஜனாதிபதி

[2017/02/18]

 

தனது சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரே ஜனாதிபதி நான் தான் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் தமது கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவார்களாயின் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த முன்மாதிரி மேலிருந்து கிடைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இன்று (17) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தனது சொத்துக்களை வெளியிடவேண்டும் என்ற ஒரு ஆனை இல்லாதபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனை வெளியிட நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அன்று பொது அபேட்சகராக தேர்தல் ஆணையாளருக்கு சொத்து விபரங்களை வெளியிட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப அவர்களுக்கும் அதனை வழங்கியதை நினைவுகூர்ந்தார்.

2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தது ஊழல் மோசடிகள் எல்லைமீறிச் சென்றிருந்த ஒரு அரசாங்கத்தை மாற்றுவதற்காகவேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டு மக்கள் புதிய அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவந்தது முன்பு இருந்த அரசாங்கத்தை போன்று செயற்படுவதற்கல்ல என்றும் கடந்த அரசாங்கத்தின் மீது மக்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் புதிய அரசாங்கத்தின் மீது சுமத்தப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கும் போது அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே சுமுகமானநிலையும் உடன்பாடும் இடம்பெறுவது முக்கியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பலமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் தாம் பழக்கப்பட்டுள்ள பிழையான கலாசாரத்திலிருந்து விடுபடுவதுடன், மிகவும் நேர்மையாக தமது கடமைகளை நாட்டுக்காக நிறைவேற்றவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று நாட்டிலுள்ள ஜனநாயக உரிமைகளை தவறாகப் பயன்படுத்தி கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் அதிகரித்துள்ளாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இராணுவத்தினர் தொடர்பில் இதுவரை எந்த அரசாங்கமும் எடுக்காத தீர்மானத்தை மேற்கொண்டு அவர்களுக்கு வழங்கக்கூடிய உயர்ந்த கௌரவத்தை பெற்றுக்கொடுத்து 12 வருடங்களை விட குறைந்த சேவைக்காலத்தைக் கொண்டுள்ள இராணுவத்தினருக்கும் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது. இதுவரை வழங்கப்படாத இந்த சலுகையை பெற்றுக்கொடுக்கும் போது மற்றுமொருசாரார் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

www.rti.gov.lk என்ற தகவல் அறியும் இணையத்தளத்தையும் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்.

அமைச்சர்களான கயந்த கருணாதிலக, நிமல் சிறிபால டி சில்வா, வஜிர அபேவர்தன, சந்தரானி பண்டார, பிரதி அமைச்சர் கருனாரத்ன பரணவிதான, ரஞ்சன் ராமநாயக்க, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய, தகவல் அறியும் சட்டம் தொடர்பான அமைச்சின் ஆலோசகர் பியதிஸ்ஸ ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்