››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சர் (IDEX 2017) ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு

பாதுகாப்பு அமைச்சர் (IDEX 2017) ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு

[2017/02/21]

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இடம்பெற்றுவரும் ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு நிகழ்வில் ஜனாதிபதி அவர்களை ரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் இன்று (பெப்ரவரி .21) கலந்துகொள்கிறார்.

குறித்த இந்நிகழ்வு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் கௌரவ ஷேய்க் கலீபா பின் செயேத் அல் நஹ்யான் அவர்கள் தலைமையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தபோதிலும் ஜனாதிபதியின் சார்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்துகொள்கிறார்.

இந்நிகழ்வு இம்மாதம் 19ம் திகதியிலிருந்து 23ம் திகதிவரை அபுதாபி சர்வதேச கண்காட்சி நிலையத்தில் நடைபெற்று வருகின்றது. மேலும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெற்றுவரும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடானது பாதுகாப்பு துறையில் அதி நவீன தொழிநுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்