››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை விமானப்படையினரால் ஸ்ரீ முருகன் தமிழ் பாடசாலை புனர்நிர்மாணம்

இலங்கை விமானப்படையினரால் ஸ்ரீ முருகன் தமிழ் பாடசாலை புனர்நிர்மாணம்

[2017/02/23]

அண்மையில் இலங்கை விமானப்படையினரால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஸ்ரீ முருகன் தமிழ் பாடசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் புனர்நிர்மாணப் பணிகள் , இலங்கை விமானப்படையின் 66வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விமானப்படை பொதுமக்கள் நலன்புரி சேவையினால் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் குறித்த நிர்மாணப்பணிகள் ஜனவரி மாதம் 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 16ம் திகதி நிறைவுற்றதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும். குறித்த இப் பாடசாலை வைபவரீதியாக நேற்று (பெப்ரவரி .21) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், சிரேஷ்ட அரச அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், விமானப்படை வீரர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்