››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு

கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு

[2017/02/26]

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் தொடராக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெதிரிகிரிய குசும் பொகுன புஷ்பாராம விகாரை, தியசென்புர போதிருக்காராமய மற்றும் அபயபுரகம அபயவர்த்தனராமய ஆகிய விகாரைகளில் நிறுவப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெதிரிகிரிய குசும் பொகுன புஷ்பாராம விகாரை, தியசென்புர போதிருக்காராமய மற்றும் அபயபுரகம அபயவர்த்தனராமய ஆகிய விகாரைகளில் நிறுவப்பட்டுள்ள குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் அப்ப்பிரதேசத்தில் உள்ள 1170 குடும்பங்கள் மற்றும் விகாரைகளில் வசிக்கும் 24 பௌத்த துறவிகள் ஆகியோர் பாதுகாப்பான தூய குடிநீரை பெற்றுக் கொள்ளவுள்ளனர். இந் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை கடற்படை ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மையம் நிர்மாணிப்பு பணிகளை மேற்கொண்ட இதேவேளை இதற்கான நிதி அனுசரணையை புத்தசாசன அமைச்சு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

சிறு நீரக நோய் பரவளாக காணப்பட்ட பிரதேசங்களில் இதுவரை சுமார் 140 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் 61,139 குடுமபங்களும் மற்றும் 47,445 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்