››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/02/28]

விமானப்படை தலைமையாக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக இன்று (பெப்ரவரி . 28) கலந்து சிறப்பித்தார்.

குறித்த இந்நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏ ஜீ பீ கித்சிறி அவர்களும் வருகை தந்திருந்தார்.

மேலும், இவ்விளையாட்டு நிகழ்வில் சயுர, தெரன, ககன மற்றும் பவன ஆகிய நான்கு இல்லங்கள் போட்டியிட்டன. இவற்றில் ககனா இல்லம் முதலிடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்ற இதேவேளை தெரன, சயுர, மற்றும் பவன ஆகிய இல்லங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பெற்றன.

மேலும் ,போட்டிகளில் வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்கள்களும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் இந்நிகழ்வின்போது வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் குருணாகல் மற்றும் கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிகளுக்கு அமைச்சர் அவர்களினால் 70 கணனிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பெற்றோர்களும் வருகைதந்திருந்தனர்.

     
     

மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு>>

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பிரித் வைபவ நிகழ்வு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த கல்விக் கண்காட்சியில் இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டார்

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய விடுதி வசதிகள்

விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

பாதுகாப்பு சேவை கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்