››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விமானப்படையின் கண்காட்சி நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

விமானப்படையின் கண்காட்சி நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

[2017/03/06]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள், இலங்கை விமானப்படையின் 66 வது ஆண்டு நிறைவையொட்டி ரத்மலான விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற மூன்று நாட்களைக் கொண்ட விஷேட கண்காட்சி நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வினைப் பார்வையிடுவதற்காக நேற்று (மார்ச், 05) அங்கு விஜயம் செய்தார்.

ரத்மலான விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி விமானப்படை முகாமைத்துவ சபை அதிகாரிகள் சகிதம் வரவேற்றார்.
மேலும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இக்கண்காட்சி இடம்பெற்ற வளாகத்தினை சுற்றிப்பார்வையிட்டதுடன் விமான சாகசங்கள், பரசூட் சாகசங்கள், தாக்குதல் நடவடிக்கைகளின் நகல் நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் என்பனவற்றையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்