››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜனாதிபதி ஜகார்த்தா Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார

ஜனாதிபதி ஜகார்த்தா Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார

[2017/03/06]

இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு பயணமான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (06) பகல் ஜகார்த்தாவில் உள்ள Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

இந்தோனேசியா அரசின் சார்பாக அந்நாட்டின் பொதுப் பணிகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் Basuki Hadimuljono மற்றும் விசேட தூதுக்குழுவினர் ஜனாதிபதியை கோலாகலமாக வரவேற்றனர்.

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் பேண்தகு மற்றும் சமநிலையான அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்டு நடைபெறும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாடு நாளை (07) ஜகார்த்தாவில் ஆரம்பமாகிறது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதுடன், இலங்கை நேரப்படி நாளை முற்பகல் 11.00 மணிக்கு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

இதே நேரம் இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தோனேசியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இன்று பிற்பகல் கலந்துகொள்ளவுள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க, திலீப் வெதஆரச்சி உள்ளிட்டோர் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் இணைந்துகொண்டுள்ளனர.

நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்