››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி பிரயோக நிகழ்வ.

இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி பிரயோக நிகழ்வு.

[2017/03/07]

இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம், அதனோடு இணைந்த மீனவர் ஒருவரது இழப்பு மற்றும் மேலும் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது அத்துடன் அனைத்து அரசாங்க முகவர் நிலையங்களும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சகல இந்திய மீனவர்களையும் மனிதாபிமான மிக்க முறையில் நடாத்துவதனை உறுதி செய்வதற்கு அதன் அர்ப்பணிப்பில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்நிகழ்வில் இலங்கைக் கடற்படை ஈடுபடவில்லை என பூர்வாங்க விசாரணைகள் குறிப்பிடுகின்றன. உண்மையில் துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்ந்திருக்கும் எனில், அது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பதுடன் ஈடுபட்ட தரப்பினர் யார் என்பதைக் கருத்திற் கொள்ளாது தொடர்புடைய இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் புவியியல் நிலை முறைமை (GPS) தொழிநுட்பத்தினையும் பயன்படுத்தி இந்நிகழ்வு பற்றிய விசாரணை செய்வதற்கு அனைத்து நடவடிக்க்களும் எடுக்கப்படும்.

நன்றி: வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்