››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்

ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்

[2017/03/08]

ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைக்குச் சொந்தமான “போல் ரிவர்” எனும் அமெரிக்க கடற்படை கப்பல் இன்று (மார்ச் .07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பளை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பலில் வருகைதந்த அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படை வீரர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், குறித்த கப்பலில் வருகைதந்த கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படை வீரர்களுடன் இணைந்து திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகலான “பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தலில் பெண்களின் வகிபாகம்” எனும் கருப்பொருளிலான நிகழ்ச்ச்சி உட்பட மருத்துவ சிகிச்சை, பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் புனரமைப்பு செய்தல், தொழில் நிபுணர்களின் நிபுணத்துவ பரிமாற்றம், சமூக உறவுத் திட்டங்கள், போன்ற பல நிகழ்ச்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண செயற்திட்டம் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த செயற்திட்ட முயற்சியானது அரசினுடைய இயங்குதிறனை இலங்கை கடற்படை ஏனைய நாட்டு கடற்படையுடன் இணைந்து நெருக்கடி சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் விளக்கங்களுடனான நிகழ்வுகளும் இடம்பெற உள்ளது.

இதேவேளை, குறித்த கப்பல் இம்மாதம் 18ம் திகதி புறப்படவுள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்