››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் மூக்குக் கண்ணாடி வினியோகம்

இராணுவத்தினரால் மூக்குக் கண்ணாடி வினியோகம்

[2017/03/09]

சாலியவெவ பிரதேசத்தில் ராஜங்கனை தென்பகுதியின் 13 மற்றும் 14 வலயங்களில் வசிக்கும் மக்களின் நன்மைகருதி மருத்துவ சிகிச்சை ஒன்று அண்மையில் (மார்ச் .07) இலங்கை இராணுவத்தின் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது தனியார் கண்சிகிச்சை நிறுவனத்தின் உதவியுடன் இப்பிரதேச மக்களின் கண் பரிசீலிக்கும் வகையிலான நடமாடும் கண் சிகிச்சை முகாம் கலாஓயா ஸ்ரீ விஜய போதிராஜராமைய விகாரையில் இடம்பெற்றதாகவும், சுமார் 500க்கு மேற்பட்ட மக்கள் தமது பார்வைக் குறைபாட்டினை பரிசீலித்து இவர்களில் 384 பேருக்கு மூக்குக் கண்ணாடி விநியோகிக்கப்பட்டதாகவும் இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கண் வில்லைகள் மாற்றுதல் தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டதுடன் அவர்களின் சிச்கிச்சைக்கான நிதி அனுசரனைக்கு நாரம்மல ஜூப்ளி லையன்ஸ் கழகம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிச்கிச்சை ஆரம்ப நிகழ்விற்கு அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வருகைதந்திருந்தனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்