››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாகிஸ்தானிய கப்பலைப் பார்வையிட்டார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாகிஸ்தானிய கப்பலைப் பார்வையிட்டார்

[2017/03/14]

கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான “பீஎன்எஸ் நஸ்ர்” கப்பலை பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று மாலை (மார்ச் 13) விஜமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, அங்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை அக்கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் ஸாகிப் இல்யாஸ் வரவேற்றார். மேலும், இக்கப்பலை சுற்றிப் பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன அவர்கள் கடற்படை அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். இதன்போது, இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் கட்டளைத்தளபதி, கொமடோர் சகா ரெஹ்மான் அவர்களால் அமைச்சருக்கு நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் கௌரவ. ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவிந்த ஜெயவர்த்தன, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் (ஒய்வு) செயிட் ஷகீல் ஹுசைன், பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் திரு.ஜன்பஸ்கான், பாதுகாப்பு ஆலோசகர், கேர்னல் ராஜில் இர்ஷாத் கான், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, முன்னால் தளபதிகள், இராஜதந்திர குழு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குறித்த இரு கப்பல்களும் இம்மாதம் 15ம் திகதி நாட்டைவிட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்