››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஓமான் தேசிய பாதுகாப்புக் கல்லூரி பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்.

ஓமான் தேசிய பாதுகாப்புக் கல்லூரி பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்.

[2017/03/20]

ஓமான் தேசிய பாதுகாப்புப் படை கல்லூரி பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி அவர்களை அமைச்சின் வளாகத்தில் வைத்து இன்று (மார்ச் .20) சந்தித்தனர். இன்று காலை இடம்பெற்ற இச்சந்திப்பில் எயார் கொமடோ நாசர் ஜும முஹம்மது அல் சட்யாளி அவர்களின் தலைமையில் பதினேழு உறுப்பினர்கள் கொண்ட ஓமானிய தூதுக் குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் இச்சந்திப்பின்போது பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி அவர்களுக்கும் ஓமானிய தூதுக் குழுவினர்களுக்குமிடையில் இருதரப்பு விவகாரங்கள், மற்றும் நல்லுறவுகள் தொடர்பில் சுமூக கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஓமானிய தூதுவர் அதிமேதகு திரு. மூஸா ஹம்தான் அல் டால், மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திருஆர்எம்எஸ் சரத்குமார மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் டி ஏ ஆர் ரணவக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்