››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவ வீரர்களினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

இராணுவ வீரர்களினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

[2017/03/22]

கிழக்கு மாகாணத்தில் டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் படைப்பிரிவைச்சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த பணியினை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் டெங்கு நோய் தொடர்பாக விஷேட ஜனாதிபதி செயலணி மற்றும் சுகாதார அமைச்சிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மேற்படி வீரர்கள் விசேடமாக திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோயினை தடுக்கும் வகையில் நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதேசத்தில் சிறு குழந்தை மற்றும் கர்ப்பிணி தாயுட்பட பல உயிர்கள் இவ் உயிர்கொல்லி டெங்கு நோயின் திடீர் தாக்கத்தினால் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22, 23 மற்றும் 24 படைப்பிரிவினர் கிண்ணியா, திருகோணமலை, உப்புவெளி, மட்டக்கிளப்பு மற்றும் கல்முனை ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் மேலும் பரவாது அதனை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்