››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய-இலங்கை இராணுவ அதிகாரிகளிடையேயான கலந்துறையாடல் ஆரம்பம்

இந்திய-இலங்கை இராணுவ அதிகாரிகளிடையேயான கலந்துறையாடல் ஆரம்பம்

[2017/03/23]

இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினரிடையே நிலவும் நட்பு ரீதியான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகளிடையில் ஆறாவது முறையாக இடம்பெறும் கலந்துறையாடல் நிகழ்வு நேற்று (மார்ச், 22) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள குறித்த இக்கலந்துரையாடலில் மேஜர் ஜெனரல் ஏபி டி இசட் விக்ரமரத்ன தலைமையிலான இலங்கை இராணுவ அதிகாரிகளும் மேஜர் ஜெனரல் சன்ஜய தாபா தலைமையிலான நான்கு இந்திய இராணுவ அதிகாரிகளும் பங்கெடுத்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாட்டு இராணுவத்தினரிடையே நிலவும் நட்பு ரீதியான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளிடையிலான கலந்துரையாடலின் அங்குரார்ப்பண நிகழ்வு 2012ம் ஆண்டு புது டில்லியில் இடம்பெற்றது.

இதேவேளை, இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு தலைமை வகிக்கும் மேஜர் ஜெனரல் சன்ஜய தாபா இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பத்தரமுல்லவில் அமைந்திருக்கும் இந்திய அமைதிகாக்கும் படைகளின் நினைவுத்தூபிக்கும் வருகை தந்த அதிதிகள் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்