››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மைத்ரி – புட்டின் நட்புறவின் அனுகூலங்களை இலங்கை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். – ரஷ்ய ஜனாதிபதி

மைத்ரி – புட்டின் நட்புறவின் அனுகூலங்களை இலங்கை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். – ரஷ்ய ஜனாதிபதி

[2017/03/24]

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ள இருதரப்பு தொடர்புகளின் அனுகூலங்களை இலங்கை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களின் அழைப்பின் பேரில் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் அவர்களுக்கும் இடையில் இன்று (24) நன்பகல் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின்போதே ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதன்போது ரஷ்ய பிரதமர் அவர்களால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சிறப்பாக வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர் தலைவர்கள் இருவருக்கும் இடையில் ஆரம்பமாகிய இருதரப்பு கலந்துரையாடல்களின் போது 60 வருடகால தொடர்புகளை வலுவுடன் முன்னோக்கி கொண்டு செல்லல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

1957 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஆரம்பமாகிய இருதரப்பு தொடர்புகள் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசாரம் போன்ற சில துறைகளில் மாத்திரம் காணப்படுவதுடன், அவற்றை மேலும் விரிவுபடுத்தி முன்னோக்கி கொண்டு செல்லல் தொடர்பாக கலந்துரையாடினர்.

நாற்பத்தி மூன்று வருடங்களின் பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு கிடைத்த இந்த உத்தியோகபூர்வ வரவேற்பு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் கிடைத்த கௌரவமாகும் என இதன்போது தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கைக்கு தேவையான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பலனாக எதிர்காலத்தில் இலங்கை மக்களுக்கு கிடைக்குமெனவும் குறிப்பிட்டார்.

இன்று அபிவிருத்தியின் புதிய பாதைகளை தேடிச் செல்லும் இலங்கை சகல நட்பு நாடுகளின் உதவிகளையும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 43 வருடங்களுக்குப் பின்னர் நெருங்கிய நண்பனாக கிடைத்துள்ள ரஷ்யா இலங்கைக்கு தனது தொடர்ச்சியான ஒத்துழைப்பினை வழங்குமென தான் நம்புவதாக குறிப்பிட்டார்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, எஸ்.பி.நாவின்ன, மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, ஜோன் அமரதுங்க, தயாசிறி ஜயசேகர ஆகியோர் உள்ளிட்ட இலங்கையின் தூதுக் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்