››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

கடற்படையினரால் பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

[2017/03/26]

அண்மையில் (மார்ச் .23) இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட மூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையங்கள் பதுளையிலுள்ள ஒருவெண்டிவெவ மத்திய மகா வித்தியாலயம், தர்மபால கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் வவுனியாவின் நெடுங்குளம் ஆகிய இடங்களில் இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம் 420 குடும்பங்கள் நெடுங்குளத்தில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும், 140 ஆசிரியர்கள் மற்றும் 1,830 மாணவர்கள் ஒருவெண்டிவெவ மத்திய மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும், 14 ஆசிரியர்கள் மற்றும் 140 மாணவர்களுட்பட மேலும் 250 குடும்பத்தினர் தர்மபால கனிஷ்ட வித்தியாலயத்திலும் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் தமது நாளாந்த குடி நீர் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தூய குடிநீரை பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சிறுநீரக நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதிதவியின் கீழ் இதுவரை நாடு பூராகவும் 167 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியாதன் மூலம் சுமார் 80,000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்