››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட சினேகபூர்வ கிரிகட் சுற்றுபோட்டி நிகழ்வு.

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேகபூர்வ கிரிகட் சுற்றுபோட்டி நிகழ்வு.

[2017/03/26]

பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் பணியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேகபூர்வ மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி இன்று (மார்ச் .26) கொழும்பு விமானப்படை விளையாட்டுமைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் எதிர்வரவுள்ள தமிழ் மற்றும் சிங்கள புதுவருட தினத்தை முன்னிட்டு அமைச்சின் நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்பட்டது.

இச்சுற்றுபோட்டியில் சாம்பியன்ஷிப் கிண்ணத்தினை சுவீகரித்துக் கொள்வதற்கான போட்டி அமைச்சின் வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரியும் இராணுவத்தினர் மற்றும் சிவிலியன்கள் உள்ளிட்ட பத்து அணிகளிடையே இடம்பெற்றது. விசேடமாக ஒவ்வொரு அணியிலும் பெண் விளையட்டு வீராங்கனைகள் இடம்பெற்றதுடன் ஆறு ஓவர் களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிய செயலாளர் அணி மற்றும் எம் எல் ஒ கிளை அணி போட்டியிட்டு இறுதியில் செயலாளர் அணி சாம்பியன்ஷிப் கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது. மேலும், வெற்றியாளர்கள் மற்றும் போட்டியின்போது தமது திறமைகளை வெளிக்காட்டிய வீர வீராங்ககனைகளுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் தேசிய அணியின் கிரிகட் வீரர் திரு. மாவன் அத்த பத்து உட்பட அமைச்சில் பணிபுரியும் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

     
     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்