››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய மற்றும் அமெரிக்க கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை.

இந்திய மற்றும் அமெரிக்க கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை

[2017/03/28]

இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் இன்று (மார்ச் .27) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்ப்பரப்பு ஆய்வுக்கப்பல் “ ஐஎன்எஸ். டர்ஷக்“ மற்றும் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான “யூஎஸ்எஸ் காம்ஸ்டக்“ ஆகிய இரு கப்பல்களும் இலங்கை வந்துள்ளன. குறித்த இரு கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், “ ஐ.என்.எஸ். டர்ஷக்“ இம்மாதம் 30ம் திகதி புறப்படும் அதேவேளை, “யூ எஸ் எஸ் காம்ஸ்டக்“ நான்கு நாள் வரை கொழும்பில் தரித்து நிற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல்களில் வருகைதந்த கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படை வீரர்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்