››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாகிஸ்தானில் இடம்பெற இருக்கும் 'PATS 2017' நிகழ்வில் இலங்கை இராணுவத்தினர் பங்கேற்பு

பாகிஸ்தானில் இடம்பெற இருக்கும் 'PATS 2017' நிகழ்வில் இலங்கை இராணுவத்தினர் பங்கேற்பு

[2017/03/28]

பாகிஸ்தானில் இடம்பெற இருக்கும் இரண்டாவது சர்வதேச பாகிஸ்தான் இராணுவ ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான (கூட்டு முயற்சி) போட்டி -2017 நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை இராணுவத்தின் சார்பாக இரு அணியினர் இன்று (மார்ச் .27) புறப்பட்டனர்.
குறித்த அணியில் இலங்கை இராணுவத்தின் இலேசாயுத காலாட்படை மற்றும் கமாண்டோ படைப்பிரிவு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ வீரர்கள் உள்ளடங்குகின்றனர். மேலும், குறித்த போட்டி நிகழ்வுகள் இம்மாதம் 31 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நிறைவு பெறவுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போட்டியில் 72 மணித்தியால சவால்மிகுந்த கால இடைவெளிக்குள் 28 கள நிகழ்வுகளை இலங்கை இராணுவத்தின் 11 வீரர்கள் நிறைவு செய்யவுள்ளனர். குறித்த வீரர்கள் மின்னேரியா இலேசாயுத காலாட்படை பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற தெரிவுப் போட்டிகளின்போது தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறை பாகிஸ்தானில் இடம்பெற இருக்கும் இரண்டாவது சர்வதேச பாகிஸ்தான் இராணுவ ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான (கூட்டு முயற்சி) போட்டி -2017 நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சீனா, எகிப்து, ஜேர்மனி, ஈரான், இந்தோனேஷியா, ஜோர்தான், மலேஷியா, நைஜீரியா, ரஷ்யா, துர்க்மெனிஸ்தான், துருக்கி, ஐக்கிய ராஜ்யம், உஸ்பெகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் மற்றும் கண்கானிப்பளர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும், இக்கண்காணிப்பாளர் குழுவில் இலங்கை இராணுவத்தை சேர்ந்த இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வருடாந்தம் நடைபெறுகின்ற குறித்த போட்டியில் அதிசிறந்த உடற்பயிற்சி, தந்திரோபாயம், தற்காப்பு திறமைகள் மற்றும் கள உத்திகள், யுத்தகள தந்திரோபாயம் ஆகியவற்றில் தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையிலும் கலந்துகொள்ளும் நாடுகளுக்கிடையே கூட்டுப்பயிற்சி மற்றும் நட்புறவினை வலுவூட்டும் வகையிளும் குறித்த போட்டி நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்