››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளில் மாநாடு

பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளில் மாநாடு

[2017/03/31]

இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம், நேபாளம் - தெற்காசிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் கொன்ராட் அடனுர் ஸ்டிப்டங் ஆகிய நிலையங்களுடன் இணைந்து “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு ஏப்ரல் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்நிகழ்வானது தெற்காசியாவின் பாதகாப்பு கற்கைகள் தொடர்பான சிந்தனைகுழுமத்தினால் கலந்துரையாடல்கள் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்தல் தொடர்பான சிறந்த நடைமுறைகளை முன்னெடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிகழ்வில் பாதுகாப்பு கற்கைகளுடன் தொடர்புடைய கல்வியியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்குற்ற உள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்