››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொடிய உயிர் கொல்லி டெங்கு நோயினை ஒழிக்க இராணுவத்தின் 58வது தலைமையாக படைப் பிரிவினர் உதவி

கொடிய உயிர் கொல்லி டெங்கு நோயினை ஒழிக்க இராணுவத்தின் 58வது தலைமையாக படைப் பிரிவினர் உதவி

[2017/04/02]

அண்மையில் (ஏப்ரல.31) காலி பூசா பகுதியில் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தமது எல்லைப் பகுதிக்கு அப்பால் டெங்கு நோய் தொற்றுதலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணியின்போது ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுறது.

குறித்த நிகழ்வினூடாக டெங்கு இனங்காணப்பட்ட பிடிவெல ( தெற்கு ) மற்றும் கேடல கிராம சேவை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் பிரதேச செயலகம், ஹிக்கடுவ பிரதேச சபை, ரத்கம, பொது சுகாதார அதிகாரி காரியாலயம், ரத்கம மற்றும் 58வது பிரிவின் படைப்பிரிவின் தலைமையகம் ஆகியன ஒன்றிணைந்து கொடிய உயிர் கொல்லி டெங்கு நோயினை ஒழிக்கும் வகையில் குறித்த பிரதேசங்களில் சிரமதானப்பாணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வு 58வது பிரிவின் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனெரல் ஏ.டபள்யூ.எம்.ஏ.டபள்யூ.என்.ரணவன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 10 இராணுவ அதிகாரிகள் மற்றும் 200 இராணுவ வீரர்கள் இணைந்து டெங்கு நுளம்புகள் பரவுவதை தவிர்க்கும் வகையில் சுமார் 240 மேற்பட்ட வீடுகள் உட்பட ஆபத்தான இடங்கள் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்