››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து ஏற்றுமதி சந்தையை வெற்றி கொள்ளும் வாய்ப்பு இளம் தலைமுறையினருக்கு உள்ளது – ஜனாதிபதி

புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து ஏற்றுமதி சந்தையை வெற்றி கொள்ளும் வாய்ப்பு இளம் தலைமுறையினருக்கு உள்ளது – ஜனாதிபதி

[2017/04/10]

பாரம்பரிய விவசாயத்துறையிலிருந்து விலகி கையடக்கத் தொலைபேசியினூடாகவும்இ இணையத்தினூடாகவும் சந்தை தொடர்புகளை ஏற்படுத்தி ஏற்றுமதி சந்தையுடன் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு தற்போதைய இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அதற்கான கடன் வசதிகளையும்இ வழிகாட்டல்களையும் வழங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் காணப்படுகின்றன என்றும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் இந் நாட்டின் விவசாயத்துறையை பலப்படுத்தி புதியதோர் பாதையில் செல்வதற்கான சூழல் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு உண்டு என்றும்; தெரிவித்தார்.

உணவு உற்பத்திக்கான தேசிய செயற்திட்டத்துடன் இணைந்ததாக விவசாய இயக்கங்களுக்கு இலவசமாக விவசாய உபகரணங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு இன்று (08) பிற்பகல் அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாய சமூகத்தில் நவீன தொழில்னுட்ப பாவனையை பிரபலப்படுத்தும் ஆரம்ப படிமுறையாக 09 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விவசாய இயக்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.

விவசாய சமூகத்தை கடன் சுமையிலிருந்து மீட்டு அவர்களது பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டின் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அவர்கள் நவீன தொழில்னுட்பங்களுடன் இணைந்து செயற்படவேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அதற்கான செயற்திட்டங்களை அரசாங்கம் தற்போது ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் மற்றும் இலக்குகளின் ஊடாகவே எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியும் என்றும்இ தான் விவசாய அமைச்சராக செயலாற்றிய வேளையில் உணவு நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நாம் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றி குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கருத்து தெரிவித்தார்

2013 ஆம் ஆண்டில் தீவிர வரட்சியை எதிர்நோக்கிய வேளையில் நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல் பிரசார மேடைகளில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணங்கள் பற்றியே அதிகமாகப் பேசப்பட்டது என்று நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள் அக்காலத்தில் இருந்த தலைவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளால் பத்திரிகைகள் நிறைந்த போதிலும் தேர்தலின் பின்னர் அவை எவையுமே நிறைவேற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் மிக சிறப்பான திட்டமிடலுடன் வினைத்திறனான முறையில் செயற்பட்டுள்ளதுடன்இ இதுவரை வழங்கப்பட்ட வரட்சி நிவாரணங்களுள் அதிக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்த செயற்திட்டம் இது என்றும் தெரிவித்தார்.

விவசாயியின் மகன் ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் விவசாயிகளின் பிரச்சினைகள் கருத்திற் கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் விவசாய சமூகம் மற்றும் விவசாயம் தொடர்பான அனுபவமும்இ உண்மையான புரிந்துணர்வும் தனக்கு உள்ளது என்றும் புதிய தொழில்னுட்பத்துடன் இணைந்து கடன் சுமையிலிருந்து விடுதலை பெற்ற பலமான பொருளாதாரத்தை உடைய விவசாய தலைமுறையை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் தான் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

விவசாய இயக்கங்களுக்கு பணிக்கொடை கொடுப்பனவு வழங்குதல்இ அறுவடைக்குப் பின்னரான தொழில்னுட்ப நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு நீண்ட சேவை உபகார பரிசுகளை வழங்குதல்இ அறுவடைக்குப் பின்னரான தொழில்னுட்ப நிறுவனத்தின் பயிற்சி செயற்திட்டங்களின் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குதல்இ சேதனப் பசளை தயாரிப்பிற்கான உபகரணங்களை வழங்குதல்இ சார லங்கா திட்டத்தில் கடன் வழங்குதல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் இதன்போது ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றன.

விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கஇ அமைச்சர் சந்ரானி பண்;டாரஇ வட மத்திய மாகாண ஆளுநர் பீ.பி. திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும்இ விவசாய அமைச்சின் செயலாளர் டீ.விஜயரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

நன்றி : ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்