››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுமக்கள் பாவனைக்கென மேலும் ஆறு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

பொதுமக்கள் பாவனைக்கென மேலும் ஆறு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

[2017/04/08]

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலத்திட்டத்தின் தொடராக மேலும் ஆறு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவைகள் திவுலன்கடவள தர்ம ஜெயந்தி விகாரை, மெதிரிகிரிய வாதிகேவய, திம்புலாக்கால நவ விலான புல்லியகொட ரஜமகா விகாரை, கெகிராவ மடதுகம, திறப்பனே வேள்ளமுதவே ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுநீரக நோய்கள் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகிவற்றின் நிதியுதவியின் கீழ் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் சுமார் 4185 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான விஷேட நிபுணதத்துவ பிரிவினால் நிர்மாணிக்கப்பட்ட இதுபோன்ற திட்டத்தின் மூலம் இதுவரை 185 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதிலுமுள்ள 86,586ற்கு மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 64,581ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்