››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை மற்றும் தென் ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

இலங்கை மற்றும் தென் ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

[2017/04/07]

“தேசிய பாதகாப்பு மாறிவரும் முறை, மற்றவேண்டிய வடிவங்கள்” எனும் தலைப்பிலான கருத்தரங்கு இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் அண்மையில் ( ஏப்ரல், 05 ) ஏற்பாடு செய்யப்பட்டது. பத்தரமுல்ல சுகுருபாயவில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் புது டில்லி மூலோபாய முன்னெடுப்புகளுக்கான ஆளுநர்கள் மன்றத்தின் உறுப்பினர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் திபங்கர்பநேர்ஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு விரிவுரையாற்றினார்.

குறித்த இக்கருத்தரங்கின் விரிவுரை தென் ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் வகையில் அமைந்திருந்ததுடன் விரிவுரையின் முடிவில் கேள்வி பதில் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.

இக்கருத்தரங்கின் முடிவில் இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் மேஜர் ஜெனரல் திபங்கர்பநேர்ஜி அவர்களுக்கு இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. குறித்த இந்நிகழ்வில் கல்விமான்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்