››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'PATS 2017' நிகழ்வில் இலங்கை இராணுவத்தினருக்கு வெண்கலப்பதக்கங்கள்

'PATS 2017' நிகழ்வில் இலங்கை இராணுவத்தினருக்கு வெள்ளிப்பதக்கங்கள்

[2017/04/11]

அண்மையில் மார்ச் 31ம் திகதியிலிருந்து ஏப்ரல் ௦8ம் திகதிவரை பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டாவது சர்வதேச பாகிஸ்தான் இராணுவ ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான (கூட்டு முயற்சி) போட்டி -2017 நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ அணியினர் இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

இம்முறை பாகிஸ்தானில் இடம்பெற்ற குறித்த போட்டி நிகழ்வில் கலந்துகொண்ட 11 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை இராணுவ அணியினருடன் சீனா, எகிப்து, இந்தோனேஷியா, ஜோர்தான், மலேஷியா, மியான்மர், இலங்கை, துருக்கி, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் 8 பாகிஸ்தானிய குழுக்கள் உட்பட மொத்தம் 16 விளையாட்டுக் குழுக்கள் இப்போட்டியில் பங்குபற்றினர். குறித்த போட்டியில் 72 மணித்தியால சவால்மிகுந்த கால இடைவெளிக்குள் 28 கள நிகழ்வுகளில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் சீனா, மற்றும் பாகிஸ்தானிய குழுக்கள் தங்கப்பதக்கங்களை வென்றதுடன் குழுக்களுடன் இலங்கை, பாகிஸ்தான், துருக்கி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த குழுக்கள் வெள்ளிப்பதக்கங்களையும் வென்றுள்ளனர். மேலும் பாகிஸ்தான், மலேஷியா, ஆகிய நாடுகள் வெண்கலப்பதக்கங்களை பெற்றுக்கொண்டதுடன் ஜோர்தான் நாட்டுக்கு மெரிட் சான்றிதள்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டி நிகழ்வினை நிறைவுசெய்த இலங்கை இராணுவ அணியினர் இன்று மாலை (ஏப்ரல் .10) நாடுதிரும்பினர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்