››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மீதோட்டமுல்ல அனர்த்தத்தில் இலங்கை இராணுவம் கூட்டாக நிவாரணப் பாணியில்

மீதோட்டமுல்ல அனர்த்தத்தில் இலங்கை இராணுவம் கூட்டாக நிவாரணப்ணியில்

[2017/04/15]

அண்மையில் (ஏப்ரல் . 14) மீதோட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்து அனர்த்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்ததோடு மக்கள் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கு - பாதுகாப்பு படை தலைமையக 14 வது படை பிரிவினர் மேற்கொண்டு வருவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இங்கு ஏற்படுகின்ற சிறு தீயினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை விமானப்படை உலங்குவானூர்தி பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதேவேளை மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் விஷேட படைப்பிரிவினரும் ஒன்றிணைத்து செயற்பட்டு வருகின்றனர்.

இவ் அனர்த்தத்தின் மூலம் முழுமையாகவும் பகுதியலவிலும் பலவீடுகள் சேதமாகியுள்ளன. குறித்த பகுதிக்குறிய மின்சாரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவருகின்றது.

மேலும், மீதோட்டமுல்ல ஸ்ரீ ராஹுல வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட விஷேட தகவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு பிரதேச வாசிகள் மற்றும் உறவினர்களை இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்தன அவர்கள் வேண்டிக்கொள்கிறார.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்