››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மீதோட்டமுல்ல நிவாரண பணியில் சுமார் 10௦௦க்கு மேற்பட்ட பாதுகாப்பு படையினர்

மீதொட்டமுல்ல நிவாரண பணியில் சுமார் 10௦௦க்கு மேற்பட்ட பாதுகாப்பு படையினர்

[2017/04/17]

மீதோட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. குறித்த பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர், விஷேட அதிரடிப்படையினர், காவல்துறையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய பணியாளர்கள் ஆகியோர் உயிர் தப்பியோரின் எண்ணிக்கையினை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் (ஏப்ரல் . 14) குறித்த குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்திருந்தன.

மேலும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் சுமார் 1050க்கு மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுவரும் இதேவேளை 15 மண் அகழ்வு இயந்திரங்களும் 15 குப்பைகள் அகழ்வு ட்ரக் வண்டிகளும் குறித்த பகுதியினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன எனவும் பாதிக்கப்பட்ட வலயத்தின் பாதுகப்பினை உறுதிப்படுத்த விஷேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்தன அவர்கள் தெரிவித்தார்.

இவ் அனர்த்தத்தின்போது உயிரிழந்தவர்களின் 27 உடல்கள் இன்று வரைக்கும் (ஏப்ரல் . 17) மீட்புப்பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு படையினரின் உதவியுடன் பிரதேச செயலாளர் தலைமையிலான அரச அதிகாரிகள் பதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பாகன மதிப்பீடு மற்றும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>

இது தொடர்பான செய்திகளுக்கு>>

மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியில்

மீதோட்டமுல்ல அனர்த்தத்தில் இலங்கை இராணுவம் கூட்டாக நிவாரணப்பணியில்
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்