››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை இந்தியக் கூட்டு கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு தொடர்கிறது

இலங்கை இந்தியக் கூட்டு கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு தொடர்கிறது

[2017/04/13]

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் இணைந்து இலங்கையின் தென் கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளும் நீரளவியல் கணக்கெடுப்பின் முதற் கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இக்கணக்கெடுப்பு பணியில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தர்ஷக் எனும் கடளவியல் கப்பல் ஈடுபத்தப்பட்டது. வெற்றிகரமாக தனது பணியினை பூர்த்தி செய்த குறித்த இக்கப்பல் காலி துறைமுகத்தை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல், 11) வந்தடைந்தது.

மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படுவுள்ள இவ்வளவீட்டுப்பணி மார்ச் மாதம் 30ம் திகதி முதல் எதிர் வரும் மே மாதம் 11ம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி கூட்டு நடவடிக்கை, கொழும்பு முதல் சங்கமன்கந்த வரையிலான கடற்பரப்பின் கடலியல் வரைபடத்தினை புதுப்பித்துக்கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் இரண்டாவது கட்டம் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பிக்க திட்டமில்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்