››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்

பாதுகாப்பு அமைச்சில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்

[2017/04/19]

மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல், 19 ) பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் விஷேட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

குறித்த இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், மலர்ந்துள்ள இப் புதுவருடம் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்த்துக்களை தெரிவித்ததுடன் இத்தருணத்தில் மீதொட்டமுள்ள பகுதியில் இடம்பெற்ற துக்கரமான நிகழ்வினையும் நினைவுக்கு கொண்டு வந்தார். எதிர்வரும் காலங்களில் எமது மக்கள் மத்தியில் ஐக்கியம் மிகவும் அவசியம் எனவும் இதன்போது அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் மங்கள விளக்கினை ஏற்றி வைத்த பாதுகாப்பு செயலாளர், அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதுவருட காலை ஆகாரத்தினை அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து சுவைத்து மகிழ்ந்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி , கடற்படைத்தளபதி, அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அமைச்சின் சிவில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்