››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடக்கில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு

வடக்கில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு

[2017/04/20]

அண்மையில் (ஏப்ரல் .16) சமூக சேவையின் ஒரு பகுதியாக இலங்கை கடற்படையினரால் ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் இரண்டு நாட்களுக்குள் கடற்படை சமூக பொறுப்பு நிதியத்திலிருந்து இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவினால் நிறுவப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாடு பூராகவும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 191 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியதன் மூலம் சுமார் 90,646 குடுமபங்களும் மற்றும் 70,200 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை இலவசமாக பெற்றுக் கொள்கின்றனர்.

இதேவேளை, அண்மையில் மேலும் 5 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை தம்புள்ள தம்பதெனிய கிராமத்திலும் அனுராதபுரம் குடகம, ஹல்மில்லவ மற்றும் மயிங்கமுவ பிரதேசத்திலும் புத்தளம் தப்போவ மற்றும் மெதிரிகிரிய திச்சபுற ஆகிய பிரதேசங்களிலும் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்