››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிகளை விடுவித்தல் தொடர்பான சந்திப்பு

பாதுகாப்பு அமைச்சில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிகளை விடுவித்தல் தொடர்பான சந்திப்பு

[2017/04/24]

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்டுவரும் காணிகளை விடுவிப்பது தொடர்பான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் (ஏப்ரல், 24) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த இந்நிகழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் கௌரவ டிஎம் சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ. விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் அருட் தந்தை விக்டர் சூசை ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குறித்த இச்சந்திப்பில் விடுவிக்கப்படவுள்ள காணிகளின் முன்னேற்ற செயற்பாடுகள், பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிசாரினால் தற்போது பயன்படுத்தப்படும் காணிகளை உடனடியாக விடுவிப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில், சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்