››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

போர்வீரர்களின் சிறுவர்களுக்கு ஜனாதிபதியினால் புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

போர்வீரர்களின் சிறுவர்களுக்கு ஜனாதிபதியினால் புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

[2017/04/25]

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் (ஏப்ரல், 25) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட குறித்த இந்நிகழ்வில் படைவீரர்களின் 82 குழந்தைகளுக்கான கல்விப் புலமைப்பரிசில்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வழங்கி வைத்தார்.

குறித்த இந்நிகவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் சிறப்பு அதிதிகளாக வருகை தந்திருந்தனர்.

மேலும் இங்கு வரவேற்புரை நிகழ்த்திய பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்த்தன அவர்கள் குறித்த இத்திட்டத்தின் முக்கியத்துவத்தினை கோடிட்டுக்காட்டியதுடன் வருகை தந்திருந்த அதிதிகளையும் வரவேற்றார்.

இந்நிகழ்வின் போது தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் மடிக்கணினிகள் என்பனவற்றை வைபரீதியாக வழங்கி வைத்தார்.

குறித்த புலமைப்பரிசில்களை இராணுவ வீரர்களின் 37 குழந்தைகளும் கடற்படை வீரர்களின் 22 குழந்தைகளும் விமானப்படை வீரர்களின் 18 குழந்தைகளும் சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்களின் 5 குழந்தைகளும் பெற்றுக்கொண்டனர். இப்புலமைப் பரிசில்கள் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் 2.8 மில்லியன் ரூபா நிதிக்கொடையிலிருந்து வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் குறித்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கி வைப்பவதில் இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை வங்கி என்பன அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர், ரணவிரு சேவா திணைக்களத்தின் தலைவி, இராணுவ, கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் சேவா வனிதா பிரிவின் தலைவிகள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் புலமைப்பரிசில்களை பர்ருக்கொள்ளும் மாணவர்கள் மற்றும அவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Grade Army Navy Air Force Civil Security Department Total
1 - 5 Grade 15 09 01 - 25
6 - 8 Grade 11 07 07 02 27
9 - 13 Grade 11 06 10 03 30

Total

37 22 18 05 82
     
     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்